புதுடெல்லி செப், 14
தமிழ்நாடு, கர்நாடக உள்ளிட்ட மாநிலங்களில் பழங்குடியினர் பட்டியலில் விடுபட்டிருந்த சமுதாயத்தினரையும் சேர்க்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அது போல் சத்தீஸ்கர், ஹிமாச்சல் பிரதேசத்திலும் வேறு சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பழங்குடியினருக்கு வழங்கப்படும் அனைத்து சலுகைகளும் நரிக்குறவர், குருவிக்காரர்களுக்கு கிடைக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.