Spread the love

பெங்களூர் செப், 13

பெங்களூர் நகரில் அதிகரித்து வரும் மக்கள் தொகை மற்றும் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டது தான் இதற்கு காரணம் என கூறப்பட்டது. இதனால் பெங்களூர் நகரில் உள்ள ஏரி, கால்வாய் உள்பட நீர்வழித்தடங்களின் ஆக்கிரமிப்புகளை அகற்ற முதல்வர் பசவராஜ் பொம்மை உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து அதற்கான பணிகளை பெங்களூர் மாநகராட்சி நிர்வாகம் முன்னெடுத்தது.

இந்த நிலையில் மகாதேவபுரா மண்டலத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை நேற்று அதிகாரிகள் மேற்கொண்டனர். மகாதேவபுரா மண்டலத்தில் உள்ள மாரத்தஹள்ளி, சின்னப்பனஹள்ளி, பசவனபுரா, ஏஇசிஎஸ் லோ-அவுட், முனேகொலலு உள்ளிட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் கட்டங்கள் புல்டோசர் வாகனங்கள் மூலம் அகற்றப்பட்டது. இதற்கு பொதுமக்கள் மற்றும் வீடுகளின் உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் மாநகராட்சி அதிகாரிகள் பின்வாங்கவில்லை. அதோடு காவல்துறையினர் உதவியுடன் மாநகராட்சி நிர்வாகம் ஆக்கிரமிப்பு கட்டடங்களை இடித்து அகற்றினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *