Month: February 2023

தொடர்ந்து ஏற்படும் நில அதிர்வுகள்.

துருக்கி பிப், 10 துருக்கி, சிரியா நாடுகளில் ஏற்பட்ட நில நடுக்கங்களுக்கு பிறகு இதுவரை 1,117 முறை நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் கட்டிடங்கள் இடிந்து விழுவதும் அதிகரித்துள்ளது. ஏற்கனவே 19 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இன்னும்…

காஷ்மீரில் பனிச்சரிவு எச்சரிக்கை.

ஜம்மு காஷ்மீர் பிப், 10 ஜம்மு காஷ்மீரில் 12 மாவட்டங்களில் 2000 முதல் 2500 மீட்டர் உயரத்தில் பனிச்சரிவு ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து அம்மாநில பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்ட அறிவிப்பில், ஆனந்த்நாக், பாரமுல்லா பூஞ்ச், ராஜோரி…

மின்மாற்றிகளை உடைத்து தாமிர கம்பிகளை திருடிய மின்வாரிய ஊழியர் உள்பட 7 பேர் கைது.

கள்ளக்குறிச்சி பிப், 8 திருக்கோவிலூர் பகுதியில் விவசாய நிலங்களுக்கு செல்லும் பாதைகளில் உள்ள 10-க்கும் மேற்பட்ட மின்மாற்றிகளை மர்ம நபர்கள் உடைத்து அதில் இருந்த தாமிர கம்பிகளை திருடிச்சென்ற சம்பவம் தொடர்கதையாக நிகழ்ந்து வந்தது. இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக மின்வாரிய…

2000 மூட்டைகள் வீதம் நெல் கொள்முதல் செய்ய வேண்டும்.

சென்னை பிப், 8 டெல்டா மாவட்டங்களில் நெல் மூட்டைகள் அதிகம் தேக்கம் அடைந்துள்ள நிலையில் தினமும் குறைந்தபட்சம் 2000 மூட்டைகள் வீதம் நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். மீண்டும் மழை வந்தால் லட்சக்கணக்கான நெல் மூட்டைகள்…

இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு வெற்றி வாய்ப்பு.

ஈரோடு பிப், 8 ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் சூடு பிடித்துள்ளது. தேர்தலில் காங்கிரசும் அதிமுக நேரடி இரட்டை இலை சின்னத்திலும் போட்டியிடுகின்றன. தற்போது அமமுக போட்டியில்லை என அறிவித்துள்ளதால், அதன் வாக்குகளும் இரட்டை இலைக்கே விழும் 2021 தேர்தலில் காங்கிரஸ் வெறும்…

ஆறு ஆண்டில் உயர்கல்விக்காக 30 லட்சம் பேர் வெளிநாடு பயணம்.

புதுடெல்லி பிப், 8 2017 முதல் 2022 வரை உயர் கல்விக்காக முப்பது லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்கள் வெளிநாடு சென்று உள்ளதாக மக்களவையில் மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் சுபாஷ் சர்க்கார் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டில் வெளிநாடு சென்றவர்களில் 7.5 லட்சம்…

ஆசிரியர்கள் விடுப்பு எடுக்க புதிய செயலி.

சென்னை பிப், 8 தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் விடுப்பு எடுக்க புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இனி விடுப்புகளை பதிவு செய்யவும் ஒப்புதல் வழங்கவும் பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தற்போது ஆசிரியர்கள் விடுப்பு வேண்டி எழுத்து…

அதானி குழும செய்திகளை வெளியிட தடை கோரி மனு.

புதுடெல்லி பிப், 8 அதானி குழுமத்தின் செய்திகளை பங்குச்சந்தை ஒழுங்காற்று அமைப்பான செபியின் அனுமதி இன்றி வெளியிட ஊடகங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஊடகங்கள் மிகைப்படுத்தி செய்திகளை வெளியிடுவதால் பங்குச்சந்தை மதிப்பு கடுமையாக…

பலி எண்ணிக்கை 30,000 ஆக உயரும் வாய்ப்பு.

துருக்கி பிப், 8 துருக்கி சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 5 ஆயிரத்திற்கும் மேல் அதிகரித்துள்ளது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வரும் நிலையில் வலி எண்ணிக்கை 30,000 ஆக உயரக்கூடும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும்…

பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் எச்சரிக்கை.

சென்னை பிப், 8 கடந்த ஆண்டு பொறியியல் கலந்தாய்வில் 9 கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேராத நிலையில் மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ள பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களை வேறு கல்லூரிக்கு மாற்ற அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது. சம்பந்தப்பட்ட கல்லூரிகளில்…