புதுடெல்லி பிப், 8
அதானி குழுமத்தின் செய்திகளை பங்குச்சந்தை ஒழுங்காற்று அமைப்பான செபியின் அனுமதி இன்றி வெளியிட ஊடகங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஊடகங்கள் மிகைப்படுத்தி செய்திகளை வெளியிடுவதால் பங்குச்சந்தை மதிப்பு கடுமையாக சரிந்துள்ளது. அச்சத்தால் முதலீட்டாளர்கள் பங்குகளை விற்பனை செய்வதால் நிதி இழப்பீடு ஏற்படுவதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.