புதுடெல்லி பிப், 11
ஹிண்டன் பார்க் அறிக்கையை அடுத்து அதானி குடும்ப பங்குகள் சரிந்து வருகின்றன. இந்நிலையில் இந்திய பொருளாதாரத்தில் ஒரு சதவீதத்திற்கும் மேல் அதானி குழுமத்திற்கு கடன்கள் இருப்பதாக நிக்கேய் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. அதானி குழுமத்தின் 10 நிறுவனங்களுக்கு ₹3.39 லட்சம் கோடி கடன் இருக்கிறது. அதில் அதானி குடும்பம் வாங்கிய அம்புஜா சிமெண்ட், ஏசிசி, என்டிடிவி ஆகிய நிறுவன கடன்களும் அடங்கும் என்று குறிப்பிட்டுள்ளது.