புதுடெல்லி பிப், 11
யுபிஐ சேவையில் 18 இந்திய மொழிகளில் குரல் அடிப்படையில் கட்டணம் செலுத்தும் வசதி அறிமுகப்பட்டதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். யுபிஐ சேவை போல் சாலையோர சிறு வியாபாரிகளும், வங்கிகளில் கடன் பெற டிஜிட்டல் கடன் வழங்கும் சேவையை மத்திய அரசு அறிமுகம் செய்யவுள்ளது. யுபிஐ சேவையை உலகளாவிய சேவையாக மாற்றும் வகையில் 5 நாடுகளுடன் NPCI இணைந்து செயல்பட தொடங்கியுள்ளது என்றார்.