சென்னை பிப், 8
டெல்டா மாவட்டங்களில் நெல் மூட்டைகள் அதிகம் தேக்கம் அடைந்துள்ள நிலையில் தினமும் குறைந்தபட்சம் 2000 மூட்டைகள் வீதம் நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். மீண்டும் மழை வந்தால் லட்சக்கணக்கான நெல் மூட்டைகள் நனைந்து வீணாகிவிடும். இதனால் விவசாயிகள் நலன் கருதி நெல் மூட்டைகளை பாதுகாக்க அரசு உரிய கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் என அரசை வலியுறுத்தியுள்ளார்.