ஜம்மு காஷ்மீர் பிப், 10
ஜம்மு காஷ்மீரில் 12 மாவட்டங்களில் 2000 முதல் 2500 மீட்டர் உயரத்தில் பனிச்சரிவு ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து அம்மாநில பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்ட அறிவிப்பில், ஆனந்த்நாக், பாரமுல்லா பூஞ்ச், ராஜோரி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்குள் அபாயம் இருப்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.