கேரளா பிப், 10
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மாசி மாத பூஜை களுக்காக பிப்ரவரி 12ம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. நடைதிறக்கப்படும் கோவிலில் மேல் சாந்தி ஜெயராமன் நம்பூதிரி தீபம் ஏற்றுகிறார். மறுநாள் காலை 5 மணிக்கு நடை திறந்ததும் அபிஷேக பூஜைகள் நடைபெறும். தொடர்ந்து பிப்ரவரி 17 வரை கோவில் நடை திறந்திருக்கும். இந்நிலையில் தரிசனம் செய்ய உள்ள பக்தர்களுக்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கி நடந்து வருகிறது.