புதுடெல்லி பிப், 11
மனிதர்களும் பறவை காய்ச்சலால் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து 1996 இல் பறவைக்காய்ச்சல் தோன்றியது முதல் அரிதாகவே மனிதர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பாலூட்டிகளுக்கு பாதிப்பு தொற்றுவது கண்காணிக்கப்படுகிறது. மனிதர்களுக்கு பெரிதாக பாதிப்பு இல்லை எனினும் இதே நிலை தொடரும் என்று கூற முடியாது. இறந்த வனவிலங்குகளிடமிருந்து தள்ளி இருக்க வேண்டும் என்று கூறியுள்ளது.