புதுடெல்லி பிப், 8
2017 முதல் 2022 வரை உயர் கல்விக்காக முப்பது லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்கள் வெளிநாடு சென்று உள்ளதாக மக்களவையில் மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் சுபாஷ் சர்க்கார் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டில் வெளிநாடு சென்றவர்களில் 7.5 லட்சம் பேர் உயர்கல்விக்காக செல்வதாக தெரிவித்துள்ளனர். வெளிநாடு செல்வோர் வாய் வழியாக தெரிவிக்கும் தகவல்கள் மற்றும் விசா அடிப்படையில் இந்த தகவல் சேகரிக்கப்படுகிறது என்றார்.