புதுச்சேரி பிப், 8
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரிக்கை என்பது தனிப்பட்ட வளர்ச்சியில் எனது கோரிக்கை அல்ல மாநில வளர்ச்சி மக்கள் நலனுக்கான கோரிக்கை என புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி கூறினார். இது பற்றி அவர் சில அரசியல் கட்சிகள் முதல்வருக்கு சங்கடம் வரும்போது மட்டும் மாநில அந்தஸ்தை பற்றி பேசுவார் என்று கூறுகின்றனர். இந்த முதல்வருக்கு எந்த சங்கடமும் இல்லை. மாநில அந்தஸ்து மத்திய அரசு கொடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.