துருக்கி பிப், 10
துருக்கி, சிரியா நாடுகளில் ஏற்பட்ட நில நடுக்கங்களுக்கு பிறகு இதுவரை 1,117 முறை நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் கட்டிடங்கள் இடிந்து விழுவதும் அதிகரித்துள்ளது. ஏற்கனவே 19 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இன்னும் ஆயிரக்கணக்கான இடைபாடுகளில் சிக்கி உள்ளதாக கூறப்படும் நிலையில், ஒவ்வொரு கட்டிடத்திலும் 400, 500 பேர் சிக்கியிருக்கலாம் என கணிக்கப்படுகிறது.