பூசணிக்காய் வளர்ப்பது என்பது சாதாரண வேலை அல்ல. அதிலும் பிரம்மாண்ட பூசணிக்காய்களை வளர்ப்பது பெரிய விஷயம். அப்படி வளர்க்கப்படும் பூசணிக்காய்களுக்கான உலக சாம்பியன்ஷிப் போட்டி கலிபோர்னியாவில் நடைபெற்றது. இதில், பிராண்டன் டாசன் என்ற பொறியாளர் வளர்த்த 1,064 கிலோ எடையுள்ள பூசணிக்காய் முதல் பரிசை தட்டி சென்றது. அவருக்கு சுமார் ₹17 லட்சம் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.