Month: September 2022

சர்வதேச கடலோர தூய்மை தின உறுதிமொழி.

ராமேஸ்வரம் செப், 17 ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் நகராட்சியில் சர்வதேச கடலோர தூய்மை தினத்தை முன்னிட்டு இன்று மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் ஒர்க்கிஸ் தலைமையில் விழிப்புணர்வு உறுதி மொழியினை அனைவரும் ஏற்றனர். உடன் நகர்மன்ற தலைவர் நாசர் கான் உள்ளார்

ராஜபாளையம் தொழில் வர்த்தக சங்கம் நடத்தும் கடையடைப்பு போராட்டம்.

ராஜபாளையம் செப், 17 ராஜபாளையத்தில் பாதாள சாக்கடை, தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம், ரயில்வே மேம்பாலப்பணியில் மெத்தப்போக்கை கண்டித்து மக்களின் பாதிப்பை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல ராஜபாளையம் தொழில் வர்த்தக சங்கம் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதற்கு ஆதரவாக ஜவஹர்…

இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் மாவிளக்கு எடுத்து பக்தர்கள் வழிபாடு

விருதுநகர் செப், 17 சாத்தூர் அருகே இருக்கன்குடியில் மாரியம்மன் கோவிலில் ஆவணி மாதம் கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அம்மனுக்கு மஞ்சள், பால், பன்னீர், தேன் உள்பட பல்வேறு வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில்…

காவல் துறையினருக்கு வெள்ள மீட்பு பயிற்சி

நாமக்கல் செப், 17 நாமக்கல் கமலாலய குளத்தில் ரப்பர் படகு மூலம் காவல் துறையினருக்கு வெள்ள மீட்பு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் தமிழ்நாடு கமண்டோ பயிற்சி பள்ளியின் பயிற்சியாளர்கள் பயிற்சி அளித்தனர். மேலும் மாவட்ட ஆயுதப்படை காவல் துறையினர் 60 பேர்‌…

தொடர் மழையால் சூளகிரி பகுதியில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி.

கிருஷ்ணகிரி செப், 17 கடந்த ஒரு மாத காலமாக சூளகிரி பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வந்தது. இதனால் சூளகிரி அருகே சின்னார், தொட்டி, மைதாண்டபள்ளி, செம்பரசனபள்ளி, கட்டிகானபள்ளி, மாரண்டபள்ளி ஆகிய பகுதிகளில் உள்ள விளை நிலங்களில் தக்காளி செடியிலேயே அழுகி…

தியாகதுருகத்தில் காவலர் பல்பொருள் அங்காடி திறப்பு விழா.

கள்ளக்குறிச்சி செப், 17 மயிலாடுதுறை, செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, தென்காசி, திருப்பத்தூர் ஆகிய 6 மாவட்டங்களில் காவலர் பல்பொருள் அங்காடியை தமிழக காவல் தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து…

குழந்தைகளுக்கான நரம்பியல்மற்றும் மூளை சம்பந்தப்பட்ட மருத்துவ முகாம் பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு.

கீழக்கரை செப். 17 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் சர்வி நரம்பியல் கிளினிக், ரோட்டரி சங்கம் மற்றும் 18 வாலிபர்கள் ஷஹீத் கல்வி நல அறக்கட்டளை (ஜகாத் கமிட்டி) இணைந்து நடத்திய மூளை மற்றும் நரம்பியல் சம்பந்தப்பட்ட மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த…

காலை உணவு திட்டம். மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

காஞ்சிபுரம் செப், 17 காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பட்டாள மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தினை மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தொடங்கி வைத்தார். உடன் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர், மேயர் மகாலட்சுமி யுவராஜ், காஞ்சிபுரம் ஒன்றிய குழு தலைவர் மலர்கொடி…

அரசு தொழிற்பயிற்சி நிறுவன கட்டிடப் பணிகள் தொடக்க நிகழ்வு.

பரமக்குடி செப், 17 ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அரசு தொழிற்பெயர்ச்சி நிறுவனத்தில் நேற்று பிற்படுத்தப்பட்ட நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தொழில்நுட்ப 4.0 மையக்கட்டிடப் பணியை தொடங்கி வைத்தார். உடன் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்க்கிஸ். பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன்…

காலை உணவு திட்டம் மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

நெல்லை செப், 17 திருநெல்வேலி மாவட்டம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு தொடங்கி வைத்தார். உடன் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப் அவர்கள், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் திரு.ரூபி.மனோகரன் , மாநகராட்சி மேயர்…