Spread the love

விருதுநகர் செப், 17

சாத்தூர் அருகே இருக்கன்குடியில் மாரியம்மன் கோவிலில் ஆவணி மாதம் கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அம்மனுக்கு மஞ்சள், பால், பன்னீர், தேன் உள்பட பல்வேறு வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

மேலும் வெளியூர்களில் இருந்து வந்த பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடன்களான அக்னி சட்டி எடுத்தல், முடி காணிக்கை மற்றும் அம்மனுக்கு மாவிளக்கு எடுத்து வழிபட்டனர். பக்தர்கள் நீண்டவரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். ஆவணி மாதம் கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. விழா ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் கருணாகரன், அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி தலைமையில் அறங்காவலர் குழுவினர், கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *