ராஜபாளையம் செப், 17
ராஜபாளையத்தில் பாதாள சாக்கடை, தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம், ரயில்வே மேம்பாலப்பணியில் மெத்தப்போக்கை கண்டித்து மக்களின் பாதிப்பை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல ராஜபாளையம் தொழில் வர்த்தக சங்கம் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதற்கு ஆதரவாக ஜவஹர் மைதானத்தில் இன்று காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
இந்நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, அகில இந்திய பார்வர்டு பிளாக், விடுதலை சிறுத்தைகள், மனிதநேய ஜனநாயக கட்சி, ஆதி தமிழர் கட்சி, தமிழர் விவசாயிகள் சங்கம், ராஜபாளையம் முகநூல் நண்பர்கள், அறம் அறக்கட்டளை, டாக்ஸி தொழிலாளர்கள் சங்கம், அன்னை தெரசா நற்பணி இயக்கம் நேதாஜி ரத்ததான கழகம் தமிழ் சங்கம் தமிழ் அன்னையர் நண்பர்கள் குழு என அனைவரும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்