விருதுநகர் செப், 19
அருப்புக்கோட்டை அருகே 11-ம் நூற்றாண்டு பாண்டியர் கால கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது. கல்வெட்டு கண்டெடுப்பு அருப்புக்கோட்டை வரலாற்றுத்துறை பேராசிரியர் விஜயராகவன் மற்றும் தொல்லியல் மாணவர் ராஜபாண்டி ஆகிய இருவரும் திருச்சுழி சுற்றுவட்டார பகுதிகளில் மேற்புற கள ஆய்வு செய்தனர்.
அப்போது அப்பகுதியிலுள்ள மூலைக்கரைப்பட்டி என்னும் ஊரில் கண்மாய் கரையின் ஓரமாக கல்வெட்டு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.