விருதுநகர் செப், 28
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள தனியார் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து நிகழ்ந்துள்ளது. சுமார் 15 கிலோமீட்டர் சுற்றளவிற்கு பலத்த சத்தத்துடன் அதிர்வு உணரப்பட்டதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். ஒரு மணி நேரத்திற்கு மேலாக பட்டாசு வெடித்துக் கொண்டிருப்பதால் யாரும் அருகில் செல்ல முடியவில்லை. இதனால் தொழிற்சாலையில் உள்ளே சிக்கி உள்ள தொழிலாளர்களை மீட்பதில் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது.