ராமநாதபுரம் செப், 25
ராமநாதபுரம் மாவட்டம் மைய நூலகத்தில் நேற்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பார்வையிட்ட ஆய்வு செய்தார். அப்போது நூலக பராமரிப்பு பணிகள் நடைபெறுவதை கண்ட அமைச்சர் பணிகளை விரைந்து முடிக்க ஒப்பந்ததாரரை அறிவுறுத்தினார். ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் உடன் இருந்தார். முன்னதாக மாவட்ட மைய நூலகர் அற்புத ஞான ருக்மணி அமைச்சரை வரவேற்றார்.