கீழக்கரை சுகாதார சீர்கேடு சரிசெய்யப்படவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் முன்வைத்த கோரிக்கைக்கு
MLA காதர்பாட்ஷா எ முத்துராமலிங்கம் சொல்லும் பதில் அதிகாரத்தின் உச்சமாகும்.
ஆளும் தமிழக அரசு (திமுகவுக்கு வாக்களிக்காதவர்களுக்குமான அரசு)என முதல்வர் பல தருணங்களில் சொல்லிவரும் நிலையில் கீழக்கரை மக்கள் வரிகட்டவில்லை என மேம்போக்காக பதில்சொல்லி கீழக்கரையை புறக்கணிக்கும் MLA வின் செயல் கண்டனத்துக்குரியது.
2021 சட்டமன்ற தேர்தலில் கொத்தாக 12000க்கும் மேல் ஓட்டு போட்ட கீழக்கரை மக்களுக்கு MLA காதர்பாட்ஷா எ முத்துராமலிங்கம் கொடுக்கும் சிறப்பு பரிசு இதுவே.
மேலும் கீழக்கரை நகராட்சி மாதாமாதம் 18 லட்சம் உதவிபெறுவதாக கூறுகிறார்.
செல்வந்தரகளின் நன்கொடை,
தனியார் கம்பெனிகளின் ஒப்பந்தம் மற்றும் அரசுநிதிகளை பெறும் கீழக்கரை நகராட்சி நிர்வாகம் செலவினம் குறித்து வெள்ளை அறிக்கை
வெளியிடவேண்டும்.
நகர்மன்ற தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்களின் மெளனம் கூடுதல் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரின் கருத்து சம்பந்தமாக குறித்து ஏற்கனவே கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் ஜஹாங்கீர் அரூஸி மற்றும் Sdpi கீழக்கரை நகர் நிர்வாகம் சவாலாக கேள்வி எழுப்பியும் ஆளும் திமுக அதிகாரிகளிடத்தில் எந்த பதிலும் இல்லை என்பதையும் நினைவுபடுத்துகிறேன்.
கீழக்கரை நகர்மன்ற நிர்வாகம் தெளிவான பதிலும்,முறையான அறிக்கையும் வெளியிடவில்லை என்றால் கீழக்கரைக்கு நகராட்சி நிர்வாகம் தேவையா?என்பதை மக்கள் பரிசீலிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.
இவ்வாறு SDPI கட்சியின் மாநில துணை தலைவர் அப்துல் ஹமீது தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
ஜஹாங்கீர் அரூஸி
மாவட்ட நிருபர்