கீழக்கரை செப். 17
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் சர்வி நரம்பியல் கிளினிக், ரோட்டரி சங்கம் மற்றும் 18 வாலிபர்கள் ஷஹீத் கல்வி நல அறக்கட்டளை (ஜகாத் கமிட்டி) இணைந்து நடத்திய மூளை மற்றும் நரம்பியல் சம்பந்தப்பட்ட மருத்துவ முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் குழந்தைகளுக்கான நரம்பியல் மருத்துவர் ராகவன் பெற்றோர்களுக்கு ஆலோசனை வழங்கி நோய் தீர்வுக்காண இலவச மருந்துகளும் வழங்கப்பட்டது.
மேலும் மருத்துவர் ராகவன் 20 ஆண்டுகள் லண்டன் மருத்துவமனையில் குழந்தைகளுக்கான நரம்பியல் மருத்துவத்துறையில் பணிபுரிந்தவர் என்பது சிறப்பு அம்சமாகும்.
இந்நிகழ்ச்சியில் ஜகாத் கமிட்டி தலைவர் ஜாகிர் உசேன் மற்றும் கீழக்கரை ரோட்டரி சங்கம் தலைவர் பொறியாளர் கபீர் தலைமையில் ஜகாத் கமிட்டியின் நிர்வாகிகள், ரோட்டரி சங்க நிர்வாகிகள் மற்றும் சபிர்க் உள்ளிட்டோர் முன்னிலையில் கீழக்கரை சாலைத்தெருவில் உள்ள 18 வாலிபர்கள் ஷஹீது ஒலியுல்லா தர்ஹா வளாகத்தில் உள்ள ஸகாத் கமிட்டி அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு அவர்களுடைய குழந்தைகள் சம்பந்தமாக கேள்விகளுக்கு பதில் பெற்று மேலும் நோய் சம்பந்தமான சந்தேகங்களுக்கும் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று பயனடைந்தனர்.
நஜீம் மரைக்கா.
அமீரக செய்திப் பிரிவு.