Month: September 2022

பள்ளி மாணவ-மாணவிகளுக்கான காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம்.

நாகப்பட்டினம் செப், 17 காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் நாகை டாடா நகர் நகராட்சி தொடக்கப்பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை சிற்றுண்டி வழங்கும் திட்ட தொடக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது. இவ்விழாவுக்கு…

தெருக்களில் தேங்கி உள்ள கழிவுநீரை அகற்றக்கோரி ராயபுரத்தில் பெண்கள் சாலை மறியல்

சென்னை செப், 17 சென்னை தண்டையார்பேட்டை கப்பல்போலு தெருவில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளம் கடந்த சில மாதங்களாக மூடப்படாமல் கிடக்கிறது. கடந்த சில நாட்களாக இப்பகுதியில் உள்ள தெருக்களில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன்,…

ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் 100 மீன் வியாபாரிகளுக்கு உபகரணங்கள் வழங்கல்.

தூத்துக்குடி செப், 17 ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் சார்பில் கல்வி, மருத்துவம், குடிநீர், சுயதொழில், மகளிர் மேம்பாடு போன்ற பணிகளை செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக சில்லரை மீன் வியாபாரம் செய்யும் மீனவர்களுக்காக நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.…

புத்தக திருவிழா தொடக்கம். அமைச்சர் பங்கேற்பு.

திருச்சி செப், 17 திருச்சி மாவட்ட நிர்வாகம் மற்றும் நேஷனல் புக் ட்ரஸ்ட் இணைந்து புத்தக திருவிழாவை திருச்சி ஜான் வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடத்தினர். இந்த விழா நேற்று தொடங்கியது. இதன் தொடக்க நிகழ்ச்சிக்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு…

ஒரு லட்சம் விசைத்தறிகள் வேலை நிறுத்தம்.

திருப்பூர் செப், 17 மின் கட்டண உயர்விற்கு எதிர்ப்பு தெரிவித்தும், விசைத்தறிகளுக்கு மின் கட்டண உயர்வில் இருந்து விலக்கு அளிக்கக் கோரியும் நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி…

நாங்கூர் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கும் விழா.

மயிலாடுதுறை செப், 17 திருவெண்காடு அருகே நாங்கூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு சீர்காழி ஒன்றியக்குழு தலைவர் கமலஜோதி தேவேந்திரன் தலைமை தாங்கினாா். ஊராட்சி தலைவர் சுகந்திநடராஜன், பெற்றோர்- ஆசிரியர் கழக தலைவர் ஈஸ்வரி, பள்ளி…

கோலார் தங்கவயலில் 971 ஏக்கரில் தொழிற்பேட்டை அமைக்கப்படும்; முதலமைச்சர் பொம்மை உறுதி.

பெங்களூரு செப், 17 கர்நாடக சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 12 ம்தேதி பெங்களூரு விதான சவுதாவில் தொடங்கியது. முதல் நாள் கூட்டத்தில் அமைச்சராக இருந்த உமேஷ்கட்டி, இங்கிலாந்து ராணி எலிசபெத் மற்றும் முன்னாள் உறுப்பினர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து சபை…

ரூ.1½ கோடியில் அடமான கடன் கூட்டுறவு நகர வங்கியின் நிர்வாகக்குழு கூட்டத்தில் தீர்மானம்.

விழுப்புரம் செப், 17 கூட்டுறவு நகர வங்கியின் நிர்வாகக்குழு கூட்டம் வங்கி அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு வங்கியின் தலைவர் தங்கசேகர் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சக்திவேல் முன்னிலை வகித்தார். இதில் வங்கி பொது மேலாளர் குமார், மேலாளர் ஜெயராமன், துணை மேலாளர்…

சி.ஐ.டி.யு. சார்பில் ஆர்ப்பாட்டம்

கரூர் செப், 17 சிஐடியு மாவட்ட மாநாட்டையொட்டி கட்டப்பட்டிருந்த கொடிகளை எவ்வித அறிவிப்பு இல்லாமல் அப்புறப்படுத்திய கரூர் மாவட்ட காவல் துறையினர் கண்டித்து சிஐடியு. சார்பில் கரூர் கோவை ரோட்டில் உள்ள ஆர். எம்.எஸ்.அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு…

நெல்லை மருத்துவ கல்லூரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

நெல்லை செப், 17 நெல்லை மருத்துவக் கல்லூரியில் 1972-ம் ஆண்டு படித்த நெல்லை மாணவர்கள் 50 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி இன்று மருத்துவக்கல்லூரியில் மீண்டும் சந்தித்தனர். கல்லூரி அரங்கில் மாணவர்கள் முன்னிலையில் பொன்விழா நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கல்லூரி டீன் டாக்டர் ரவிச்சந்திரன்,…