மயிலாடுதுறை செப், 17
திருவெண்காடு அருகே நாங்கூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு சீர்காழி ஒன்றியக்குழு தலைவர் கமலஜோதி தேவேந்திரன் தலைமை தாங்கினாா். ஊராட்சி தலைவர் சுகந்திநடராஜன், பெற்றோர்- ஆசிரியர் கழக தலைவர் ஈஸ்வரி, பள்ளி மேலாண்மை குழு தலைவர் ஆதிலட்சுமி, துணைத் தலைமை ஆசிரியர் மணிமேகலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் கலைச்செல்வம் வரவேற்றார். சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் கலந்துகொண்டு 329 மாணவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கி பேசினார்.
இவ்விழாவில் சீர்காழி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் பஞ்சுகுமார், பொதுக்குழு உறுப்பினர் முத்து மகேந்திரன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர்கள் விஜயஸ்வரன், ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.