மயிலாடுதுறை செப், 20
மயிலாடுதுறை, சீர்காழி ஆகிய இரண்டு இடங்களில் அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகிறது. தொடக்க காலத்தில் அதிக அளவில் உணவு தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வந்த இந்த உணவகத்தில் கொரோனா ஊரடங்கிற்கு பிறகு விற்பனையில் தொய்வு ஏற்பட்டது. இதன் காரணமாக வாடிக்கையாளர்கள் குறைந்ததால் தற்போது குறைந்த அளவில் உணவு தயாரித்து வினியோகிக்கின்றனர். மலிவு விலையில் உணவு கிடைப்பதால் மக்கள் வாங்கி சாப்பிட்டு திருப்தியுடன் செல்கின்றனர்.
மேலும் ஆதரவற்ற பலருக்கு இந்த உணவகம் மிகப் பெரும் உதவியாக அமைந்துள்ளது பசியாற உணவு உட்கொண்டு செல்கிறார்கள். இந்த உணவகத்தை மேம்படுத்த வேண்டும். மேலும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வரும் ஏழைகளுக்கு இந்த அம்மா உணவகம் பெரும் உதவியாக உள்ளது. இங்கு நல்ல முறையில் உணவு தயாரித்து தருகிறார்கள் இந்த உணவகத்தை இன்னும் மேம்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.