மயிலாடுதுறை செப், 21
மயிலாடுதுறை மணல்மேடு பகுதியில் இயங்கி வரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் முறைகேடு நடப்பதாக விவசாயிகளிடம் இருந்து மாவட்ட நிர்வாகத்திற்கு புகார்கள் தெரிவிக்கப்பட்டன.
இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் லலிதா நேற்று திடீரென மணல்மேடு பகுதியில் உள்ள வில்லியநல்லூர் அரசு நேரடி கொள்முதல் நிலையத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டார். உடன் துறை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்