மயிலாடுதுறை செப், 24
சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவில் கீழத்தெருவில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் உணவு பாதுகாப்புத்துறை அரசு முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவர் கொள்முதல் செய்யப்படும் நெல்லினை உடனுக்குடன் சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தினார். தொடர்ந்து வைத்தீஸ்வரன் கோவில்-மணல்மேடு சாலையில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிக்கு சென்று விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ள உரமூட்டைகளின் இருப்பு விவரங்களை ஆய்வு செய்தார். பின்னர் 2 மகளிர் சுய உதவி குழுவினருக்கு ரூ.4 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.