மயிலாடுதுறை செப், 16
திருவிழந்தூர் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் மாணவ-மாணவிகளுக்கான நவீன கழிவறை கட்டுமானப் பணி தொடக்க நிகழ்ச்சி நடந்தது.
இந்நிகழ்ச்சிக்கு நகரசபை தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையர் செல்வபாலாஜி, நகராட்சி பொறியாளர் சனல்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் கலந்துகொண்டு கழிவறை கட்டுவதற்கான கட்டுமானப்பணியை தொடங்கி வைத்தார். இதில் நகரசபை துணைத் தலைவர் சிவக்குமார், நகர சபை உறுப்பினர்கள் ரமேஷ், சம்பத், ரிஷி, சபா, ரகு, ஜெயந்திரமேஷ் மற்றும் நகராட்சி அலுவலர்கள், பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.