கரூர் செப், 17
சிஐடியு மாவட்ட மாநாட்டையொட்டி கட்டப்பட்டிருந்த கொடிகளை எவ்வித அறிவிப்பு இல்லாமல் அப்புறப்படுத்திய கரூர் மாவட்ட காவல் துறையினர் கண்டித்து சிஐடியு. சார்பில் கரூர் கோவை ரோட்டில் உள்ள ஆர். எம்.எஸ்.அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு சிஐடியு மாவட்ட தலைவர் ஜீவானந்தம் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் ஜோதிபாசு முன்னிலை வகித்தார். இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.