Spread the love

கரூர் ஜூன், 8

கரூர் மாநகர பகுதிகளில் பலாப்பழ விற்பனை அதிகளவு நடைபெற்று வருகிறது. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ஆசாத் சாலை, வடக்கு மற்றும் தெற்கு பிரதட்சணம் சாலை, லைட்ஹவுஸ் கார்னர், சர்ச் கார்னர், லைட்ஹவுஸ் கார்னர், சுங்ககேட், திருமாநிலையூர் போன்ற பகுதிகளில் அந்தந்த சீசன்களில் விளைவிக்கப்படும் பழங்கள் அனைத்தும் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதே போல், புதுக்கோட்டை மாவட்ட பகுதிகளில் விளைவிக்கப்படும் சுவை மிகுந்த பலாப்பழங்கள் மொத்தமாக கொண்டு வரப்பட்டு வியாபாரிகளால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. முக்கனிகளில் இரண்டாவது இடத்தில் உள்ள பலாப்பழம், பொதுவாக கரூர் மாநகரத்திற்கு இந்த சீசனில் புதுக்கோட்டை, திண்டிவனம், விழுப்புரம் போன்ற மாவட்ட பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.இதன் சுவை அதிகம் என்பதால் இந்த வகை பழங்களை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். சீசன் இல்லாத சமயங்களில் கேரள மாநிலம் திருச்சூர், பாலக்காடு போன்ற பகுதிகளில் இருந்து பலாப்பழங்கள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *