Spread the love

திருப்பூர் ஜூன், 8

திருப்பூர் மாவட்டத்தில் 534.60 மில்லி மீட்டர் மழை பதிவானது. திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவி வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்திருந்தது. அதன்படி திருப்பூர் பகுதிகளில் நேற்று முன்தினம் காலை முதல் மாலை மேகமூட்டத்துடன் காணப்பட்டது.மாலையிலிருந்து பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்ய தொடங்கியது. இரவு முழுவதும் தொடர்ந்து மழை நீடித்தது.

மேலும் மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி பெய்த மழை அளவின் விவரம் வருமாறு:திருப்பூர் வடக்கு பகுதியில் 7 மி. மீட்டர், குமார்நகரில் 20 மி.மீ, திருப்பூர் தெற்கு பகுதியில் 5 மி.மீ, பல்லடம் ரோட்டில் 2 மி மீ, அவிநாசியில் 3 மிமீ, ஊத்துக்குளி 6.80 மிமீ,பல்லடத்தில் 1 மிமீ, தாராபுரத்தில் 14 மிமீ, மூலனூர் 45 மிமீ, குண்டடத்தில் 8 மிமீ, உப்பாறு அணையில் 9 மிமீ, நல்லதங்காள் ஓடையில் 45 மிமீ, காங்கயத்தில் 4.60 மிமீ, வெள்ள கோவிலில் 51.20 மிமீ, வட்டமலை கடை ஓடையில் 63.00 மிமீ, உடுமலையில் 8.20 மிமீ, அமராவதி அணை பகுதியில் 55 மிமீ, திருமூர்த்தி அணை பகுதியில் 48 மி. மீ, மடத்துக்குளத்தில் 94 மி. மீ என மொத்தம் 534.60 மில்லி மீட்டர் மழை மாவட்டம் முழுவதும் பதிவானது. இதன் சராசரி 26.73 சதவீதம் ஆகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *