கரூர் செப், 18
கரூர் மாவட்டத்தில் 37-வது மாபெரும் தடுப்பூசி முகாம் இன்றுகாலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை 1,388 மையங்களில் நடைபெற்று வருகிறது. கரூர் மாவட்டத்தில் 12 முதல் 14 வயதுடைய பள்ளி செல்லும் குழந்தைகள் மற்றும் 15 முதல் 18 வயதுடைய கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களின் சதவீதம் குறைவாக உள்ளதால் அவர்களுக்கு கொரோனா தொற்று அதிகம் பரவ வாய்ப்பு உள்ளது. இவ்வயதுடையவர்கள் இத்தடுப்பூசி முகாமில் தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம்.