நாகப்பட்டினம் செப், 17
காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் நாகை டாடா நகர் நகராட்சி தொடக்கப்பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை சிற்றுண்டி வழங்கும் திட்ட தொடக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது.
இவ்விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் தலைமை தாங்கி, மாணவர்களுக்கு உணவு பரிமாறி திட்டத்தை தொடங்கி வைத்தார். சட்ட மன்ற உறுப்பினர்கள் முகமது ஷா நவாஸ், நாகைமாலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நகர மன்ற தலைவர் மாரிமுத்து, நகராட்சி ஆணையர் ஸ்ரீதேவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.