நாகப்பட்டினம் செப், 16
வேதாரண்யம் கஸ்தூர்பா காந்தி கன்யா குருகுலத்தில் குருகுலம் அறக்கட்டளை நிறுவனர் மறைந்த அப்பாக்குட்டி பிள்ளையின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா பள்ளியின் தலைவர் அரிகிருஷ்ணன் தலைமையில் நடந்தது. நகராட்சி தலைவர் புகழேந்தி, வர்த்தக சங்க மாநிலத்துணை தலைவர் தென்னரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இவ்விழாவில் புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கலைக்கல்லூரி தமிழ் துறை தலைவர் சேதுபதி, பேராசிரியர் பர்வீன் சுல்தானா ஆகியோர் பேசினர். இதில் தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள், மதுரை ஆதீனம், முன்னாள் அமைச்சர் மணியன், மற்றும் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து கோவை தியாகு குழுவினரின் சிறப்பு கலை நிகழ்ச்சிகளும், வேதாரண்யம் கோவில் ஆதின வித்வான் கேசவன் குழுவினரின் நாதஸ்வர இன்னிசை கச்சேரியும் நடந்தது.