Month: August 2022

போதைக்கு எதிரான சங்கங்கள் துவக்க நிகழ்வு.

நெல்லை ஆகஸ்ட், 12 பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு மைதானத்தில் போதை பொருள்களுக்கெதிரான ஆசிரியர், பெற்றோர், மாணவ,மாணவியர்கள் அடங்கிய 5 சங்கங்களை தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் அப்பாவு அவர்கள் தொடங்கி வைத்து பள்ளி மாணவமாணவியர்களுடன் உறுதிமொழி ஏற்றுக் கொண்டார். உடன் மாவட்ட…

மீன்பிடி துறைமுக பாலத்தில் ஏற்பட்டுள்ள திடீர் பள்ளத்தை சீரமைக்க மீனவர்கள் கோரிக்கை.

ராமேசுவரம் ஆகஸ்ட், 12 ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் குந்துகால் கடற்கரையில் உள்ள ஆழ்கடல் மீன்பிடி துறைமுக பாலத்தில் ஏற்பட்டுள்ள திடீர் பள்ளத்தை சீரமைக்க மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இங்கு ஒரே நேரத்தில் 300-க்கும் மேற்பட்ட ஆழ்கடல் மீன்பிடி விசைப்படகுகள் நிறுத்த வசதியாக…

கோவை சாலையில் பதிக்கப்பட்ட எரிவாயு குழாயில் உடைப்பு

கோயம்புத்தூர் ஆகஸ்ட், 12 எரிவாயு குழாய் பதிக்கும் பணி கோவை மாநகரின் பல்வேறு பகுதியில் மத்திய அரசின் நிறுவனத்தின் சார்பில் 24 மணி நேர எரிவாயு வழங்க குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன்படி கோவை விளாங்குறிச்சி-தண்ணீர்பந்தல் சாலை பகுதியில்…

மாரியம்மன் கோவிலில் மாவிளக்கு ஊர்வலம் நடந்தது.

நல்லம்பள்ளி ஆகஸ்ட், 12 தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே மா.குட்டூர் கிராமத்தில் மாரியம்மன் கோவிலில் கடந்த 8 ம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. தொடர்ந்து அம்மனுக்கு கூழ் ஊற்றும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று பக்தர்கள் மாவிளக்கு, தீச்சட்டி எடுத்து ஊர்வலம்…

கோவா அணிக்காக விளையாடும் அர்ஜூன் டெண்டுல்கர்.

புதுடெல்லி ஆகஸ்ட், 12 இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் தெண்டுல்கரின் மகன் அர்ஜூன் தெண்டுல்கர் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் ஆவார். 22 வயதான அர்ஜூன் 2020-21-ம் ஆண்டில் சையத் முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட்டில் மும்பை அணிக்காக 2 ஆட்டங்களில் விளையாடினார்.…

மாநகராட்சி அலுவலகத்தை கேபிள் டி.பி. ஆபரேட்டர்கள் முற்றுகை.

திண்டுக்கல் ஆகஸ்ட், 12 திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் கேபிள் டி.வி. இணைப்புக்கு வயர்களை கொண்டு செல்வதற்கு தளவாடகை கட்டணம் செலுத்தும்படி மாநகராட்சி சார்பில் பிரசுரங்கள் வழங்கப்பட்டு வருகிறது இதனால் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் கவலை அடைந்து உள்ளனர். இந்த நிலையில் நேற்று…

ஆவணி அவிட்டம் வழிபாடு.

ஈரோடு ஆகஸ்ட், 12 பிரசித்தி பெற்ற சுயம்பு நாகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி அவிட்டம் விழா சிறப்பாக கொண்டாடப்படும். இந்த நாளில் பக்தர்கள் புதிய பூணூல் அணிந்து கொள்வது வழக்கம். அதன்படி நேற்று ஆவணி அவிட்டம் விழா…

தனியார் வேலைவாய்ப்பு முகாம்.

காஞ்சிபுரம் ஆகஸ்ட், 12 காஞ்சிரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் படித்து வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு…

தேசியக்கொடியுடன் ராணுவ வீரர்கள் பாதயாத்திரை.

கன்னியாகுமரி ஆகஸ்ட், 12 இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரியில் இருந்து திருவனந்தபுரம் வரை ராணுவ வீரர்கள் தேசியக்கொடியுடன் பாதயாத்திரை தொடங்கினர். கன்னியாகுமரியில் இருந்து திருவனந்தபுரம் வரை ராணுவ வீரர்கள் தேசியக்கொடியுடன் ‘திரங்கா யாத்ரா’ என்ற பெயரில் பாதயாத்திரை தொடங்கினர்.…

கிருஷ்ணகிரியில் 18 ஆயிரம் வீடுகளுக்கு தேசிய கொடியை நகராட்சி தலைவர் வழங்கினார்.

கிருஷ்ணகிரி ஆகஸ்ட், 12 நாட்டின் சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் நாளை முதல் வருகிற 15 ம் தேதி வரை தேசியக் கொடியை அனைத்து வீடுகளிலும் ஏற்ற மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. அதன்படி கிருஷ்ணகிரி நகராட்சியின், 33 வார்டுகளில் உள்ள…