நெல்லை ஆகஸ்ட், 12
பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு மைதானத்தில் போதை பொருள்களுக்கெதிரான ஆசிரியர், பெற்றோர், மாணவ,மாணவியர்கள் அடங்கிய 5 சங்கங்களை தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் அப்பாவு அவர்கள் தொடங்கி வைத்து பள்ளி மாணவமாணவியர்களுடன் உறுதிமொழி ஏற்றுக் கொண்டார்.
உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணு, பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப், மாநகர காவல் ஆணையாளர் அவினாஷ் குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன், மாநகராட்சி மேயர் சரவணன், மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி மற்றும் அரசு அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.