நெல்லை ஆக, 25
தவெக மாநாடு நடைபெறும் இடம் மீண்டும் மாற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்ட அவர் திருச்சி, மதுரை, மாவட்டங்களில் இடம் கிடைக்காததால், விக்ரவாண்டியை இறுதி செய்ததாக கூறப்பட்டது. எனினும் தற்போது மாநாடு நடைபெறும் இடம் மீண்டும் மாற இருப்பதாக கூறப்படுகிறது. தஞ்சாவூர், சேலம், நெல்லையில் இடம் தேர்வு செய்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.