சென்னை ஆக, 25
முக்குலத்தோர் சமூக மாவட்ட செயலாளர்களுடன் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் ரகசிய ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. மக்களவைத் தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்ததற்கு முக்குலத்தோர் வாக்குகள் குறைந்தது காரணம் எனக் கூறப்படுகிறது. இது குறித்து அதிமுக மாவட்ட செயலாளர்களாக உள்ள முக்குலத்தோர் சமூகத்தினருடன் இபிஎஸ் அண்மையில் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.