Spread the love

திண்டுக்கல் ஆகஸ்ட், 12

திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் கேபிள் டி.வி. இணைப்புக்கு வயர்களை கொண்டு செல்வதற்கு தளவாடகை கட்டணம் செலுத்தும்படி மாநகராட்சி சார்பில் பிரசுரங்கள் வழங்கப்பட்டு வருகிறது இதனால் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் கவலை அடைந்து உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று மாநகராட்சி அலுவலகத்துக்கு கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் வந்தனர். மேலும் மாநில அரசு விதித்த கட்டணத்தை ரத்து செய்யக்கோரி தாலுகா கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் நலச்சங்கத்தின் தலைவர் சுரேஷ் தலைமையில் செயலாளர் முத்து, வெங்கடகிருஷ்ணன், துணை தலைவர் மகேந்திரன் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

இதுகுறித்து சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளதாவது:

கேபிள் டி.வி. இணைப்புக்கு நாங்கள் 18 சதவீத ஜி.எஸ்.டி. வரி செலுத்தி வருகிறோம். ஆனால் மாநில அரசு கேபிள் டி.வி. இணைப்புக்கு ஒரு கி.மீ. தூரம் வயரை கொண்டு செல்ல ஆண்டுக்கு ரூ 21500 கட்டணம் செலுத்தும்படி கூறுகிறது. ஆனால் மத்திய அரசு ஒரு முறை கட்டணமாக ஒரு கி.மீ. தூரத்துக்கு ரூ.1000 செலுத்தினாலும் போதும் என்று கூறுகிறது.

இதற்கிடையே மாநில அரசின் கட்டணத்தை செலுத்தும்படி மாநகராட்சி சார்பில் பிரசுரங்கள் அனுப்பப்பட்டு உள்ளது. கட்டணத்தை செலுத்த தவறினால் கேபிள் டி.வி. வயர்களை துண்டித்து விடுவதாக கூறுகின்றனர். எனவே மாநில அரசின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கூறினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *