திண்டுக்கல் ஜூன், 1
திண்டுக்கல் மாவட்ட பாமக நிர்வாகிகளை கூண்டோடு மாற்றம் செய்து ராமதாஸ் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். திண்டுக்கல் தெற்கு, கிழக்கு, வடக்கு, மேற்கு மாவட்ட பாமக நிர்வாகிகள் மாற்றப்பட்ட நிலையில், ஒருங்கிணைந்த மாவட்ட வன்னியர் சங்கத் தலைவராக வெள்ளைகோபால் நியமிக்கப்பட்டுள்ளார். ராணிப்பேட்டை கிழக்கு, கடலூர் மேற்கு, கிழக்கு,தெற்கு,வடக்கு மாவட்டச் செயலாளர்களையும் ராமதாஸ் நீக்கியுள்ளார்.