ஈரோடு மே, 25
மதிமுகவின் 31-வது பொதுக்குழு கூட்டம் ஈரோட்டில் ஜூன் 22-ம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.
அக்கட்சியின் அவைத் தலைவர் அர்ஜுனராஜ் தலைமையில், ஈரோடு பரிமளம் மகாலில் அன்றைய நாள் காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில், கட்சியின் உள்கட்டமைப்பு, நிர்வாகிகள் செயல்பாடுகள், 2026 தேர்தல் களம் ஆகியவை குறித்து பேசப்படவுள்ளது. மதிமுக, திமுக கூட்டணியிலேயே தொடர்கிறது.