Month: October 2024

மெரினாவில் இன்று விமான சாகச நிகழ்ச்சி.

சென்னை அக், 6 இந்திய விமானப்படையின் 92 ம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் இன்று விமான சாகச நிகழ்ச்சி நடைபெற உள்ளது. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தேஜஸ் உள்ளிட்ட சுமார் 72 போர் விமானங்கள் சாகசங்களில் ஈடுபட உள்ளன.…

அதிபர் மேக்ரானுக்கு நேதன்யாகு பதிலடி.

பிரான்ஸ் அக், 8 இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்குவதை நிறுத்தி உள்ளதாக பிரான்ஸ் அதிபர் மேக்ரான் தெரிவித்திருந்த நிலையில் அவருக்கு பதில் அளிக்கும் வகையில், இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு வீடியோ ஒன்றை வெளியேற்றுள்ளார். அதில் இஸ்ரேலுக்கு எதிராக ஆயுத தடை விதித்துள்ள மேக்கரான்…

இடி மின்னலுடன் கனமழை.

சென்னை அக், 6 தமிழகத்தில் இன்று 17 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், திருச்சி, கரூர், நீலகிரி, கோவை, திண்டுக்கல், திருப்பூர், புதுக்கோட்டை, தேனி, மதுரை, சிவகங்கை,…

இந்தியா-பாகிஸ்தான் இன்று பலப்பரிட்சை.

அக், 6 ஐசிசி மகளிர் டி20 உலக கோப்பையில் இந்தியா இன்று பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. முதல் போட்டியில் நியூசிலாந்து அணியிடம் தோல்வி அடைந்த இந்திய அணி இன்று நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. முதல் போட்டியில் இந்திய அணி பேட்டிங்,…

துபாய் ஈமான் சார்பில் நடைபெற்ற மீலாது நபி மத நல்லிணக்க பேச்சுப்போட்டி – பரிசாக தங்க காசுகளை அள்ளி வழங்கிய KRG குழும நிறுவனர் கண்ணன் ரவி.

துபாய் அக், 6 ஐக்கிய அரபு அமீரக துபாயில் அரசு அங்கீகாரத்துடன் செயல்படும் தமிழ் சமூக அமைப்பான துபாய் ஈமான் கலாச்சார மையம் சார்பாக மீலாது விழாவையொட்டி நடத்தப்பட்ட முஹம்மது நபிகள் பெருமானார் குறித்து பேச்சிப்போட்டிக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி தலைவர் பிஎஸ்எம்…

கீழக்கரையில் சீர்செய்யப்படாத சாலைகளும் சுத்தம் செய்யப்படாத வாறுகால் குப்பைகளும்!

கீழக்கரை அக், 5 கீழக்கரை முழுவதும் ஃபேவர்பிளாக் கற்களால் ஆன சாலைகள் அமைக்கப்பட்ட பிறகு ஆங்காங்கே கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக காட்சி தருகிறது. நடுத்தெரு ஷிபா மெடிக்கல் அருகில் பல மாதங்களாக கற்கள் பெயர்ந்து அவ்வழியே செல்லும் வாகனங்களின் டயர்களை…

இலங்கை செல்லும் வெளியுறவு அமைச்சர்.

இலங்கை அக், 1 இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வருகிற 4-ம் தேதி இலங்கைக்கு பயணம் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் இலங்கை அதிபர் தேர்தலுக்குப் பின் நாட்டிற்கு பயணம் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு அமைச்சராக ஜெய்சங்கர் இருப்பார். இலங்கை…

ரஜினிகாந்த் உடல் நலக்குறைவு.

சென்னை அக், 1 உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரஜினியின் உடல்நிலை சீராக உள்ளதாக குடும்பத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர். அவரது உடல்நிலை குறித்து அவரது ரசிகர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். இதனிடையே மருத்துவர்கள் அறிவுறுத்தல் பேரிலேயே அவர் மருத்துவமனையில்…