சென்னை அக், 6
இந்திய விமானப்படையின் 92 ம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் இன்று விமான சாகச நிகழ்ச்சி நடைபெற உள்ளது. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தேஜஸ் உள்ளிட்ட சுமார் 72 போர் விமானங்கள் சாகசங்களில் ஈடுபட உள்ளன. காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது. சுமார் 15 லட்சம் பேர் கண்டுகளிக்க வாய்ப்பு உள்ளதால் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.