சென்னை அக், 6
பாலியல் புகாரில் சிக்கிய நடன இயக்குனர் ஜானிக்கான தேசிய விருது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டதுள்ளதால் விருந்து குழு இம்முடிவை எடுத்துள்ளது. திருச்சிற்றம்பலம் படத்தில் மேகம் கருக்காதா பாடலுக்காக அவருக்கு விருது அறிவிக்கப்பட்டது. ஆனால் விருது அறிவிக்கப்பட்ட சில நாட்களிலேயே பாலியல் வழக்கில் கைதான அவர் தற்போது ஜாமீனில் வெளியே உள்ளார்.