சென்னை அக், 6
தமிழகத்தில் இன்று 17 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், திருச்சி, கரூர், நீலகிரி, கோவை, திண்டுக்கல், திருப்பூர், புதுக்கோட்டை, தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும் என்று கணித்துள்ளது. சென்னையில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யலாம். எனவும் கூறியுள்ளது.