இலங்கை அக், 1
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வருகிற 4-ம் தேதி இலங்கைக்கு பயணம் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் இலங்கை அதிபர் தேர்தலுக்குப் பின் நாட்டிற்கு பயணம் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு அமைச்சராக ஜெய்சங்கர் இருப்பார். இலங்கை இடதுசாரி அரசுடனான இந்தியாவின் வெளியுறவு கொள்கையில் தாக்கம் ஏற்படுவதால் இந்த பயணம் அதி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.