ஜப்பான் அக், 1
ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா மற்றும் அவரது அமைச்சரவையில் இடம் பெற்றவர்கள் இன்று பதவி விலகினர். ஆளும் சுதந்திர ஜனநாயக கட்சியின் தலைவராக மூன்று ஆண்டுகள் நிறைவு பெற்றதை அடுத்து கடந்த ஆகஸ்டில் பதவி விலகப் போவதாக கிஷிடா அறிவித்திருந்தார். ஆளும் கட்சியின் புதிய தலைவராக ஷிகெரு இஷிபா கடந்த வெள்ளிக்கிழமை தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. விரைவில் இஷிபா பிரதமராக பதவி ஏற்க உள்ளார்.