அக், 6
ஐசிசி மகளிர் டி20 உலக கோப்பையில் இந்தியா இன்று பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. முதல் போட்டியில் நியூசிலாந்து அணியிடம் தோல்வி அடைந்த இந்திய அணி இன்று நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. முதல் போட்டியில் இந்திய அணி பேட்டிங், பவுலிங், பீல்டிங் என்று அனைத்திலும் தடுமாறியது. மறுபுறம் பாகிஸ்தான் அணி இலங்கை அணியை வீழ்த்தி தெம்புடன் களமிறங்க உள்ளது.