கீழக்கரை அக், 5
கீழக்கரை முழுவதும் ஃபேவர்பிளாக் கற்களால் ஆன சாலைகள் அமைக்கப்பட்ட பிறகு ஆங்காங்கே கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக காட்சி தருகிறது.
நடுத்தெரு ஷிபா மெடிக்கல் அருகில் பல மாதங்களாக கற்கள் பெயர்ந்து அவ்வழியே செல்லும் வாகனங்களின் டயர்களை பதம் பார்த்து வருகிறது.
கீழக்கரை பழைய ஜெட்டிபாலம் அருகே கழிவுநீர் வெளியேறும் வாறுகாலில் குப்பைகள் தேங்கி சுகாதார சீர்கேடு நிலவுகிறது.இதுபோன்று ஊரின் பல்வேறு பகுதிகளிலும் இந்த அவலநிலை நீடித்து வருகிறது.
இதுகுறித்து சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் வாட்சப் தளங்களில் நகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் இதுநாள் வரை கண்டு கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நகராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு கீழக்கரையில் நிலவி வரும் சுகாதார சீர்கேட்டினையும் குண்டு குழியுமான சாலைகளையும் சீர்செய்து கொடுக்குமா?காத்திருப்போம் காலம் பதில் சொல்லும் வரை.
ஜஹாங்கீர் அரூஸி
மாவட்ட நிருபர்
கீழக்கரை