Month: December 2022

கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்ட வேதிகா..

சென்னை டிச, 3ராகவா லாரன்ஸ் இயக்கிய “முனி” படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை வேதிகா. காளை, பரதேசி, காவிய தலைவன் உள்ளிட்ட பல்வேறு தமிழ் படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து வருகிறார்.…

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வேண்டும் அமைச்சர் முத்துசாமி

ஈரோடு டிச,3கனிமார்க்கெட் ஜவுளிச்சந்தையில் புதிதாக கட்டப்பட்டு உள்ள வணிக வளாகத்தை தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி நேற்று ஆய்வு செய்தார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அவர் கூறியதாவது: ஈரோடு மாநகராட்சியில் புறநகர் பஸ்கள் வந்து செல்ல சோலார் பகுதியில் தற்காலிக…

மணப்பாறை ஜவுளி வியாபாரியிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை.

திருச்சி டிச,3திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உள்ள பூமாலைபட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜா(வயது 44). பட்டதாரியான இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு லண்டனில் வேலை பார்த்ததாக கூறப்படுகிறது. தற்போது இவர் ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். இவர் மீது சிறுமிகள் உள்ளிட்டோரின்…

குஜராத் இரண்டாம் கட்ட தேர்தல். 93 தொகுதிகளுக்கு வருகிற 5ம் தேதி வாக்குப்பதிவு

ஆமதாபாத் டிச, 3182 உறுப்பினர் கொண்ட குஜராத் சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இதில் தெற்கு குஜராத் மற்றும் கட்ச்-சவுராஷ்டிரா பிராந்தியங்களுக்கு உட்பட்ட 89 தொகுதிகளில் முதல் கட்டமாக நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடந்தது. 19 மாவட்டங்களை சேர்ந்த இந்த…

அமைச்சர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் மீனவர்களின் வேலைநிறுத்த போராட்டம் வாபஸ்.

புதுக்கோட்டை டிச, 3 புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த 24 விசைப்படகு மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கடந்த 29ம் தேதி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். மேலும் அவர்களது 5 விசைப்படகையும் பறிமுதல் செய்தனர்.…

மராட்டிய அமைச்சர்களின் கர்நாடக பயணம் திடீர் தள்ளிவைப்பு.

மும்பை டிச,3கர்நாடக 1960-ம் ஆண்டு முதல் எல்லைப் பிரச்சினை நிலவி வருகிறது. கர்நாடக ஆளுகைக்கு உட்பட்ட பெலகாவி மாவட்டத்தில் மராத்தி பேசும் மக்கள் அதிகளவில் வசிக்கும் பகுதிகளை தங்களது மாநிலத்துடன் இணைக்க வேண்டும் என்று மராட்டியம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இது…

கீழக்கரை 18வாலிபர்கள் தர்ஹா வளாகத்தில் தொழுகைக்கூடம் அமைக்கும் விழா.

கீழக்கரை ,டிச3ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை, சாலை தெருவில் உஸ்வத்துன் ஹஸ்னா முஸ்லீம் சங்கம் நிர்வாகத்தில் வக்பு வாரியத்திற்கு உட்பட்ட 18 வாலிபர்கள் தர்ஹா உள்புறத்தில் தொழுகை கூடம் அமைக்கும் அடிக்கல் நாட்டு விழா அனைத்து சமூதாய கூட்டமைப்பின் தலைவர் P.R.L ஹாமீது…

மாணவர் மீது ஆசிரியர் தாக்குதல்

பெங்களூரு டிச,3துமகூரு மாவட்டம் கெப்பூரு பகுதியில் ஒரு பள்ளி உள்ளது. அந்த பள்ளியில் படிக்கும் மாணவரை, ஆசிரியர் கொடூரமாக தாக்கியதாக கூறப்படுகிகறது. இதில், அந்த மாணவர் மயக்கம் அடைந்து விழுந்தார். இதனால் பள்ளியில் சிறிது நேரம் பரபரப்பு உண்டானது. உடனடியாக மாணவருக்கு…

மதுரையில் மல்லிகை பூவின் விலை கிடுகிடு உயர்வு

தேனி டிச 3,நேற்று ரூ.1500க்கு விற்பனையான மல்லிகைப்பூ இன்று ரூ.3500ஆக விலை உயர்ந்துள்ளது. குமரி, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தோவாளை சந்தையில் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அதேபோல தேனியில் மல்லிகைப்பூ அதிகபட்சனாக கிலோவுக்கு ரூ.5,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. மதுரையிலும் விலை…

தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க. சார்பில் போராட்டம் – எடப்பாடி பழனிசாமி .

கோயம்புத்தூர் ,டிச3 மின்கட்டணம், சொத்து வரி, பால் விலை உயர்வை கண்டித்தும், கோவை மாவட்டத்தை தி.மு.க. அரசு புறக்கணிப்பதாக குற்றம் சாட்டியும் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் சிவானந்தா காலனியில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதற்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி…